ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த நடிகைகள் மட்டுமே அதிகம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் பல திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். அதன்படி திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தாலும் அவருடைய உதவியை நாடாமல் தனியாக வாய்ப்பு தேடி தன்னுடைய முயற்சியில் வெற்றியும் கண்டார்.
இவர் ஜோக்கர் திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தும் அசத்தினார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற போதும் ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பட வாய்ப்பு பிடிக்க போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது லவால் தவான் என்பவரை ரம்யா பாண்டியன் கரம் பிடிக்க உள்ளார். தவான் யோகா பயிற்சி கொடுப்பவறாம். மேலும் வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்க நினைப்பவர்களுக்கு வழிமுறைகளையும் அவர் சொல்லி வருகின்றார். இவர்களின் திருமணம் இமயமலை ரிஷிகேஷ் அருகில் உள்ள ஒரு கோவிலில் வருகின்ற நவம்பர் எட்டாம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பை ரம்யா பாண்டியன் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…