தமிழ்நாடு அரசு சார்பில் இந்து அறநிலைத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கும்பாபிஷேகம், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்பு, இலவச ஆன்மீகச் சுற்றுலா போன்றவற்றை நடைமுறையில் உள்ளது. தற்போது ராமேஸ்வரம், அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவில் வரை 600 பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மீக சுற்றுலாக்கு அழைத்துச் செல்வதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறநிலை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து ஒரு மண்டபத்தில் 30 பக்தர்கள் என 600 நபர்களை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்து மதத்தை சேர்ந்த 60 இலிருந்து 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதோடு வட்டாட்சியரிடம் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதி உள்ளதாக குறிப்பிட்ட மருத்துவச் சான்றிதழும் ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும். மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் அல்லது www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களை இணைத்து மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் அக்டோபர் 22, 2025 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 1800 425 1757 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R. வீரமணி உட்பட மூவரை காவல்துறையினர்…
பாஜகவின் தேசிய தலைமை, நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை நியமித்து…
பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் மாகாணம், புரோம்ஸ்கிரோவ் பகுதியைச் சேர்ந்த கேட்டி மர்பி (33) மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் கிர்பி தம்பதியினர்,…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளரும்…
அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…