2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் டாக்டர் ராமதாஸின் சமீபத்திய கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. அன்புமணி ராமதாஸ் தரப்பு அதிமுகவுடன் கைகோர்த்துள்ள நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமக அணி திமுக கூட்டணியில் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் இது குறித்துப் பேசிய ராமதாஸ், “அரசியலில் எதுவும் நடக்கலாம், எதையுமே கணிக்க முடியாது” என்று சூசகமாகப் பதிலளித்ததோடு, திமுக அரசின் செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளார்.
ராமதாஸின் இந்த நிலைப்பாடு திமுக கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாதியவாதக் கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்பதில் விசிக தலைவர் திருமாவளவன் உறுதியாக உள்ள நிலையில், பாமக உள்ளே வந்தால் விசிக வெளியேறும் சூழல் உருவாகலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், பாமகவின் வருகை குறித்த செய்திகள் வெறும் யூகங்களே என்றும், கூட்டணியின் இறுதி முடிவைத் தலைவர் திருமாவளவனே அறிவிப்பார் என்றும் விசிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், திமுக கூட்டணியில் நிலவும் இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க, ராமதாஸ் தரப்பை நேரடியாகச் சேர்க்காமல் “மானசீக ஆதரவு” என்ற அடிப்படையில் திமுக கையாள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பிரவேசம் மற்றும் காங்கிரஸின் தற்போதைய நகர்வுகள் திமுகவுக்குச் சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுவதால், பலமான கூட்டணியை அமைக்க திமுக அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறது. 2026 தேர்தல் களம் ராமதாஸ் – திருமாவளவன் இடையிலான மோதலால் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…