தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனிடையே பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி நாளுக்கு நாள் மிகப்பெரிய சண்டையாகவே மாறி உள்ளது. ராமதாஸ் தன்னுடைய பேரன் முகுந்தனுக்கு கட்சியின் இளைஞரணி தலைவர் பதவி வழங்கியதை அன்புமணி கடுமையாக எதிர்த்திருந்தார். இவர்கள் இருவரின் சண்டை பொது மேடைகளில் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதும், ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதும் என பல நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறிவிட்டது. இறுதியாக அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கினார். ஆனால் அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளிக்க ராமதாஸ் ஆத்திரமடைந்தார். இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் பாமகவின் மாம்பழ சின்னமும் நேற்று முடக்கப்பட்டது. மேலும் அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் கூறியதை மறுக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனிடையே பாமக உட்கட்சி விவகாரம் பூதகரமாக வெடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் இன்னும் சற்று நேரத்தில் சிபிஐயில் புகார் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாமக பொதுக்குழு குறித்த போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஐ இயக்குனரை நேரில் சந்தித்த ஜிகே மணி புகார் மனுவை கொடுக்க உள்ளார். இந்த விவகாரம் தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…