தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணி திமுக கூட்டணியை நோக்கி நகர்வதை ஒரே நாளில் நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது. குறிப்பாக, “அரசியலில் எதுவும் நடக்கும்” எனக் கூறிய ராமதாஸ், திருமாவளவன் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியில் பாமக இணைவதற்குத் தயார் என்பதையே மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். விசிக – பாமக இடையிலான நீண்டகால முரண்பாடுகளைத் தாண்டி, தேர்தல் அரசியலில் புதிய மாற்றத்திற்கு அவர் அச்சாரம் போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இரண்டாவதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியைப் பற்றிச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “ஸ்டாலினின் ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது” என்று ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி முகாமில் இருப்பவர்கள் பொதுவாக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கும் சூழலில், ராமதாஸின் இந்தப் புகழுரை திமுக மீதான அவரது மென்மையான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. அதேபோல், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அத்தகைய செய்திகளைக் கற்பனையானது என்று அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
மூன்றாவதாக, ராமதாஸ் தரப்பு ஆதரவாளரான ஜி.கே. மணி அளித்த பேட்டியில், தங்களுக்குக் கூட்டணி ஆட்சியில் பங்கு என்ற எண்ணம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் ஆட்சியில் பங்கு கோரி வரும் நிலையில், ராமதாஸ் தரப்பினர் “ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்” என்று கூறியிருப்பது திமுக தலைமைக்கு நிம்மதியையும், ஒரு சாதகமான சிக்னலையும் கொடுத்துள்ளது. இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளும் பாமகவின் ராமதாஸ் அணி வரும் தேர்தலில் திமுகவோடு கைகோர்ப்பதற்கான வாய்ப்புகளைப் பிரகாசப்படுத்தியுள்ளன.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…