ஒன்றரை ஆண்டு பகையை உடைத்த ஒரு குழந்தை… ராமதாஸ் – அன்புமணி சந்திப்பில் நடந்த ‘அந்த’ இரண்டரை மணி நேர ரகசியம்….!

Spread the love

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 61ஆவது திருமண நாளையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற குடும்பச் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் பனிப்போர், இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. நேற்று காலை தனது மனைவி சவுமியா, மகள்கள், மருமகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் தைலாபுரம் வந்த அன்புமணி ராமதாஸ், உணர்ச்சிப் பெருக்குடன் தந்தை ராமதாஸைக் கட்டித்தழுவி, ஆனந்தக் கண்ணீருடன் ராமதாஸ் – சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

முந்தைய காலங்களில் குடும்ப விசேஷங்களின் போது தாய் சரஸ்வதியை மட்டும் சந்தித்துவிட்டு, வீட்டில் இருக்கும் தந்தையைச் சந்திக்காமல் அன்புமணி தவிர்த்து வந்த நிலையில், இந்த முறை சுமார் இரண்டரை மணி நேரம் தம்பதியினர் மனம் திறந்து பேசியுள்ளனர். குறிப்பாக, கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது அன்புமணியின் மகள்கள் “ஜி.கே.மணி தான் எங்கள் குடும்பத்தைப் பிரித்துவிட்டார், அய்யா என் குழந்தையைக் கூடப் பார்க்க வரவில்லை” என்று மேடையில் அழுததும், அதற்கு ராமதாஸ் “கிளிசரின் போட்டு அழுகிறார்கள்” எனப் பதிலடி கொடுத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அதே கொள்ளுப் பேரக் குழந்தையை ராமதாஸிடம் நேரில் காட்டி அன்புமணி குடும்பத்தினர் ஆசி பெற்றிருப்பது, குடும்பப் பகையை மறந்து அவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டதை உறுதிப்படுத்துகிறது.

“இனி எல்லாம் நல்லதே நடக்கும்” என்று செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் சுருக்கமாகக் கூறிவிட்டுச் சென்றாலும், இந்த திடீர் இணைப்பின் பின்னணியில் பல்வேறு அரசியல் கேள்விகள் எழுந்துள்ளன. சட்டசபை தேர்தலின் போதே இணையாத தந்தை – மகன் கூட்டணி, தற்போது இணைந்துள்ளதன் மூலம் பாமக மீண்டும் ஒன்றுபட்டுச் செயல்பட அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன. எனினும், கட்சியைத் தனித்து வழிநடத்த நினைத்த அன்புமணி மற்றும் பாமகவின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு ஆகியவை இனி எவ்வாறு மாறும், தலைவர் பதவிகளை இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பார்களா என்ற விவாதங்களும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.

அதே வேளையில், இந்த குடும்பச் சந்திப்பு கட்சிக்குள் இருக்கும் மற்ற முக்கிய நிர்வாகிகளின் நிலையை என்னவாக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. குடும்பத்தைப் பிரித்துவிட்டார் என்று அன்புமணியின் மகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட மூத்த தலைவர் ஜி.கே.மணி கட்சியில் தொடர்ந்து நீடிப்பாரா என்ற ஐயமும், தற்போது செயல் தலைவராக இருக்கும் காந்திமதியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், காந்திமதி தனது தம்பி அன்புமணியுடன் மீண்டும் சுமுகமான உறவைப் பாராட்டுவாரா, பாமகவின் உட்கட்சிப் பூசல்கள் முழுமையாக ஓயுமா என்பது வரும் நாட்களில் பாமக மேற்கொள்ளும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளின் மூலமே தெரியவரும்.

Nanthini

Recent Posts

BREAKING: முன்னாள் நீதிபதி C.S. கர்ணன் காலமானார்… விசிக ஆழ்ந்த இரங்கல்…!

முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71) மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாகச்…

8 seconds ago

ஐயோ கொடுமையே… ஒரே வீட்டில் 3 குழந்தைகள் மர்ம மரணம்… பின்னணியில் நடந்தது என்ன?… உ . பி – யில் அரங்கேறிய பெரும் சோகம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் 72 மணி நேரத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…

8 minutes ago

ஐயோ… காட்டு வழியில் 12 வயது சிறுமியைக் கடத்தி வன்கொடுமை… போலீஸ் விரட்டியதில் கால் உடைந்து… சிக்கிய 26 வயது வாலிபர்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…

22 minutes ago

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… மகளிர் உரிமைத் தொகை நாளை வர வாய்ப்பு…!

மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…

26 minutes ago

ரோட்டில் நடக்கும் போது உஷார்… மின்னல் வேகத்தில் வந்த கார்… நொடியில் மாறிய இளைஞரின் தலைவிதி… இணையத்தை அதிரவைக்கும் CCTV காட்சி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…

60 minutes ago

இனி இதுதான் கதியா?… வெறிச்சோடி கிடந்த கவுண்டர்கள்… SBI கிளையில் காத்திருந்து நொந்துபோன மக்கள்… வாக்குவாதத்தால் பரபரப்பு…!!

வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…

1 மணத்தியாலம் ago