தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவும் பலமான கூட்டணியை அமைக்கத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, மறைந்த விஜயகாந்த் அவர்களின் தேமுதிகவை மீண்டும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேமுதிகவுக்கென குறிப்பிட்ட வாக்கு வங்கி இருப்பதால், அவர்கள் கூட்டணியில் இருப்பது முக்கியம் என அதிமுக மற்றும் பாஜக கருதுகின்றன.
இருப்பினும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்வைக்கும் நிபந்தனைகள் கூட்டணி முடிவில் பெரும் தடையாக உருவெடுத்துள்ளன. வரவிருக்கும் தேர்தலில் தேமுதிகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதோடு, மிக முக்கியமாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha MP) பதவியும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது மகனின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தேமுதிகவின் இந்த ராஜ்யசபா சீட் கோரிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. அதிமுகவிடம் உள்ள மிகக் குறைந்த மாநிலங்களவை இடங்களை, சமீபத்தில் கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன் அல்லது கட்சி சீனியர்களுக்கே ஒதுக்க அவர் திட்டமிட்டுள்ளார். “வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை” என்கிற ரீதியில் அதிமுக தலைமை கறாராகப் பதிலளித்துள்ளதால், பிரேமலதா விஜயகாந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தற்போதுள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி இறங்கி வராத வரை தேமுதிக தனது இறுதி முடிவை அறிவிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், தேமுதிக மாற்று வழிகளை யோசிக்கலாம் அல்லது தனித்து போட்டியிடும் நிலைக்கும் தள்ளப்படலாம். இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருமா அல்லது தேர்தல் களத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி…
கனடாவின் வின்னிபெக் நகரில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள 'மிஸ் கிறிஸ்டின்ஸ் கிச்சன்' என்ற ஜமைக்கன் உணவகம், 15 வயதுக்கு உட்பட்ட…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் பகுதியில், பால் கேன்களை ஏற்றிக்கொண்டு சென்ற மின்சார ரிக்ஷா ஒன்று, பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள்…
காசிப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுவா சாலையில், இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினர் மீது அரசு விளம்பரப்…
மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்திலுள்ள பராஜ் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷம்சுதீன் மித்யா, தனது 15 வயது…
சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை ஏமாற்றி, அவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் வங்கிக் கடன் பெற்று…