Categories: சினிமா

இந்தப்படம் ஓடாது என்று முடிவெடுத்த ரஜினிகாந்த்… ஒரே நாளில் ஒரு கோடி வசூல் சாதனை படைத்த திரைப்படம்…

Spread the love

இந்தியாவின் மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக திரையுலகில் நடித்து வரும் ரஜினிகாந்த் அவர்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அன்று முதல் இன்று வரை தக்க வைத்து கொண்டு இருக்கிறார். இவரின் நடை,உடை,பேச்சு ஸ்டைலுக்காகவே மக்கள் இவரை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தனர். இவர் வெளிப்படுத்தும் ஸ்டைல்களை பார்க்கவே ரசிகர் கூட்டம் இருந்தது. அப்படி ஒரு கட்டத்தில் ரஜினி இருந்தால் மட்டும் போதும் அப்படம் வெற்றி அடையும். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே இந்த படம் ஓடாது என்று ஒரு படத்தை நினைத்து இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம். ரஜினிகாந்த் ஓடவே ஓடாது என்று நினைத்த திரைப்படம் தான் ராஜாதி ராஜா. ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய மசாலா திரைப்படம் ராஜாதி ராஜா. இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். நதியா மற்றும் ராதா நாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் ராதாரவி, வினு சக்கரவர்த்தி, ஜனகராஜ், ஆனந்தராஜ், விஜயகுமார் போன்றோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ராஜாதி ராஜா திரைப்படம், ஒரு இளைஞன் தனது தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க முயலும் பணக்கார எஸ்ட்டேட் உரிமையாளரின் மகன் ராஜா என்ற கதாபாத்திரத்தை சுற்றி வருகிறது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் ஆவார். ஆர். சுந்தர்ராஜன் முதலில் ரஜினிகாந்தை வைத்து ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. பின்னர் ரஜினிகாந்தை வைத்து ராஜாதி ராஜா படத்தை இயக்க சுந்தரராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை பாவலர் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ராதா மற்றும் நதியா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது ரேவதி மற்றும் ரூபினி ஆகியோர்கள் தான். கால்ஷீட் பிரச்சினைகள் இருந்ததால் அவர்களின் கதாபாத்திரம் ராதாவுக்கும் நதியாவுக்கும் வழங்கப்பட்டது. நடிகை ராதா ரஜினிகாந்த் உடன் நடித்த கடைசி படம் இதுதான் மற்றும் நதியா ரஜினிகாந்த் உடன் நடித்த ஒரே திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 1989 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. யாரும் எதிர்பாக்காத வகையில் ஒரே நாளில் இத்திரைப்படம் ஒரு கோடி வசூலித்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கூட ஹிட்டானது. இப்படி வெற்றி பெற்ற இந்த ராஜாதி ராஜா திரைப்படத்தை தான் ரஜினிகாந்த் அவர்கள் ஓடாது என்று நினைத்திருக்கிறார்.

admin

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

1 மணத்தியாலம் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

1 மணத்தியாலம் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

1 மணத்தியாலம் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

1 மணத்தியாலம் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

1 மணத்தியாலம் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

2 மணத்தியாலங்கள் ago