Categories: சினிமா

பாபா படத்தில் ஆரம்பித்தது… வேட்டையன் வரை தொடரும் பிரச்சனை.. விநியோகஸ்தர்கள் போராட்டமும் ரஜினியின் எதிர்வினையும்!

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் மாஸ் மகாராஜாவாக இருக்கிறார். தற்போது தன்னுடைய 73 வயதிலும் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக களத்தில் நிற்கிறார்.

Rajini in kuselan

பாபா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது. இதனால் விநியோகஸ்தர்கள் மிகப்பெரிய தொகை கொடுத்து அந்த படத்தை வாங்கினார்கள். ஆனால் ரிலீஸுக்குப் பிறகு ஒரே நாளில் பாபா படம் பப்படம் ஆகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் பாபா படம் அப்போது ரஜினிகாந்துக்கு அரசியல் ரீதியாகவும் சில எதிர்ப்புகள் இருந்தன. தமிழக அரசியல் தலைவர் ஒருவரோடு ரஜினி கருத்து மோதலில் ஈடுபட்டார். இதுவும் பாபா படத்துக்குப் பின்னடைவாக அமைந்தது.

அதனால் அந்த பட விநியோகஸ்தர்களுக்கு ரஜினி பணத்தைத் திரும்பக் கொடுத்தார். அதில் இருந்து விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தால் தயாரிப்பாளர்களை அணுக ஆரம்பித்தார்கள். அதற்கு முன்னர் இந்த ட்ரண்ட் இல்லை. அதைத் தொடங்கிவைத்தார் ரஜினி. அதன் பின்னர் அவரின் குசேலன் படம் தோல்வி அடைந்தபோது விநியோகஸ்தர்களுக்குப் பணம் கொடுத்தார்.

Rajini in darbar

இந்நிலையில் இதே போல ரஜினியின் தர்பார் மற்றும் லிங்கா ஆகிய படங்கள் தோல்வி அடைந்தபோது ரஜினி அதைக் கண்டுகொள்ளவில்லை. தயாரிபபளர்களின் தலையில் கட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இந்நிலையில்தான் தர்பார் படத்தை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் தற்போது வேட்டையன் படத்துக்கு எதிராக போராட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தமுறை ரஜினி அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

vinoth

Recent Posts

என்ன ஒரு எளிமை… நடுரோட்டில் ஆட்டோவை கையில் எடுத்த பிரபல மேயர்… குஜராத்தில் நடந்த சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

நார்வே நாட்டின் போர்சாங்கர் நகராட்சியின் மேயரான ஜோ இங் ஹெஸ்ஜெவிக், குஜராத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி உலா வரும் வீடியோ…

5 minutes ago

ஹார்முஸ் காரணம் இல்லையா?…. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு புதுக் குண்டை தூக்கிப்போட்ட டொனால்ட் ட்ரம்ப்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…

18 minutes ago

FLASH NEWS: “5 தொகுதிகள்… ஒரே நாளில் தேர்தல்”….. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்…. காலையிலேயே தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட்….!

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…

22 minutes ago

“அத பண்ணாதீங்க… இப்படி பண்ணி பாருங்க”…. முதல்வர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் திருமாவளவன்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…

26 minutes ago

“வி.எஸ்.பாபுவுக்கு என்னாச்சு..?”….. 1 மாதமாக தொடரும் கமுக்கம்….. வெள்ளை அறிக்கை கேட்டு டாக்டர் கிருஷ்ணசாமி போட்ட குண்டு….!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…

30 minutes ago