எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராக வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சமூக வலைத்தளங்களில் திமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு நீங்களும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இந்த பதிலடி என்பது அசிங்கமாக இருக்கக் கூடாது. மரியாதையான வார்த்தைகளால் பதிலடி கொடுங்கள். அடுத்து அமையப் போகின்ற ஆட்சி அதிமுக ஆட்சிதான். எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தின் முதல்வராக உறுதியாக வரப் போகின்றார். அதனை எந்த ஒரு கொம்பனாலும் தடுக்க முடியாது.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு அற்புதமான வளமான மற்றும் பலமான கூட்டணி. இந்த கூட்டணி தான் வெல்லும் கூட்டணி. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தட்டி கேட்டு வீட்டுக்கு அனுப்பும் பணியை தமிழக மக்கள் செய்வார்கள். தோல்வி என்ற பரிசை திமுகவிற்கு தரப் போகின்றன. வெற்றி என்ற மணிமகுடத்தை எடப்பாடி யாருக்கு தரப்போகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி 2026 மே 5 ஆம் தேதி கோட்டை கொத்தளத்தில் முதல்வராக பதவி ஏற்க போகின்றார். களத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் துணிச்சல் திமுகவிற்கு கிடையாது என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி…
கனடாவின் வின்னிபெக் நகரில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள 'மிஸ் கிறிஸ்டின்ஸ் கிச்சன்' என்ற ஜமைக்கன் உணவகம், 15 வயதுக்கு உட்பட்ட…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் பகுதியில், பால் கேன்களை ஏற்றிக்கொண்டு சென்ற மின்சார ரிக்ஷா ஒன்று, பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள்…
காசிப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுவா சாலையில், இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினர் மீது அரசு விளம்பரப்…
மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்திலுள்ள பராஜ் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷம்சுதீன் மித்யா, தனது 15 வயது…