Categories: HISTORY

பேட்ஸ்மேன்கள் கழுத்தில் அணிந்திருக்கும் இந்த நெக் பேண்ட் அவர்களின் உயிரை காப்பாற்ற உதவுமா..? வியக்க வைத்த காரணம்..!

கடந்த மே 15ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான அணியின் தொடக்க வீரரான பட்லருக்கு பதிலாக அதே  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டாம் கோஹ்லர் காட்மோர் இடம்பெற்றார். அவர் அணிந்திருந்த நெக் பேண்ட் அனைவரின் கண்களையும் கவர்ந்தது.

அது என்ன? அதனை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அது குறித்த விளக்கத்தை இதில் நாம் தெரிந்து கொள்வோம். ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று ஃபைனல்ஸ்க்கு செல்கின்றது.

தற்போது ஹைதராபாத் அணியும் கொல்கத்தா அணியும் பைனலில் போட்டி போட இருக்கின்றனர். கடந்த மே 15ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் பட்லருக்கு பதிலாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டாம் கோஹ்லர் காட்மோர் பங்கேற்றார்.

ஆனால் அவர் பட்லரின் இடத்தை முழுமையாக நிரப்பவில்லை என்று தான் கூற வேண்டும். 23 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இவர் ஆட்டம் சரியாக இல்லை என்றாலும் அவர் அணிந்த நெக் பேண்ட் தான் அனைவரிடத்திலும் பேசு பொருளாக மாறியது. அவர் கழுத்தில் அணிந்திருந்த கருப்பு நிற பேண்டை 100, ஐபிஎல் டி20, ஐஎல்டி 20 மற்றும் பிக் பாஷ் லீக் உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பயன்படுத்திருக்கின்றார்.

இதனை அனைவரும் பேஷன் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அது ஃபேஷன் கிடையாது. அது உடல் நிலையை கண்காணிக்கும் ஒரு கருவி. அதாவது வீரர்கள் தங்களது உடல் நிலையை கண்காணிப்பதற்காக இந்த பேண்டை பயன்படுத்தி வருவார்கள். Q காலர் பேண்ட் என்று அழைக்கப்படும் இந்த கருவி தலையில் ஏற்படும் காயங்களை குறைப்பதற்காக பயன்படும் ஒரு சாதனமாகும்.

q3 இன்னோவேஷன் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இது அமெரிக்க கால்பந்து வீரர்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முதன் முதலில் கிரிக்கெட் வீரர் காட்மோர் இதனை பயன்படுத்திருக்கின்றார். சாதாரணமாக நமது தலையில் ஏதாவது ஒரு பொருள் படும்போது மூளை பாதிக்கும். அதனை தவிர்க்க இது பயன்படுகின்றது.

இது கழுத்து நரம்புகளுக்கு சிறு அழுத்தத்தை கொடுத்து தலையில் இருக்கும் ரத்தத்தின் அழுத்தத்தை அதிகரிக்க செய்து மூளையை தாக்கப்படும் போது அதன் இயக்கத்தை சற்று குறைகின்றது. இதனால் பந்து படும்போது மூளையை ஒரு பாதுகாப்பு கருவியாக பாதுகாக்கின்றது இந்த க்யூ காலர் பேண்ட், இது கட்டாயம் விளையாட்டுத்துறையில் இருக்கும் அனைவருக்கும் நல்லதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதன் விலை தற்போது 199 அமெரிக்க டாலர்களாகும். அதாவது இந்திய மதிப்பில் 16,517 ரூபாய் ஆகும்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

6 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

8 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

9 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

9 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

10 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

12 மணி நேரங்கள் ago