#image_title
பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் கடந்த 2009-ஆம் ஆண்டு ரிலீசான கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவருக்கு 33 வயது ஆகிறது. ரகுல் ப்ரீத் சிங் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழில் ரிலீசான யுவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் என்ட்ரி கொடுத்தார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் ரிலீசான தடையறத் தாக்க படம் ரகுல் பிரீத் சிங்குக்கு நல்ல வரவேற்பை தேடி கொடுத்தது. இவர் கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
பிரபல தயாரிப்பாளரான ஜாக்கி பக்னானியும் ரகுல் பிரீத் சிங்கம் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி இருவருக்கும் கோவாவில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து நடித்து வருகிறார். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்துள்ளார்.
இந்த படம் வருகிற ஜூலை மாதம் 12-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வபோது போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் உடையில் ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்த போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…