தேர்தல் ஆணையம் பாஜகவோடு இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக 100% உறுதியான அணுகுண்டு போன்ற ஆதாரங்கள் இருப்பதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் இன்று மதியம் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா, ஹரியானா சட்டமன்ற தேர்தல், மக்களவைத் தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் குறித்த தரவுகள் மற்றும் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி விளக்கமளித்தார், அதில் மகாராஷ்டிராவில் 40 லட்சம் வாக்காளர்கள் மர்மமான முறையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்,
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் திருத்தப்பட்டது என்ற எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் இடையில் வெறும் ஐந்து மாதங்களில் ஒரு கோடி வாக்காளர்கள் புதிதாக வந்ததை கண்டறிந்தோம். எங்கள் வாதத்தின் மையக்கரு என்னவென்றால் மகாராஷ்டிரா தேர்தல் திருடப்பட்டது என்பதுதான். பிரச்சனையின் மையக்கரு வாக்காளர் பட்டியல். அது இந்த நாட்டின் சொத்து. தேர்தல் ஆணையம் எங்களுக்கு வாக்காளர் பட்டியலை கொடுக்க மறுக்கிறது.
பிறகு ஒரு படி மேலே சென்று வாக்குச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அளிக்க போகிறோம் என்று சொன்னார்கள். இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் மகாராஷ்டிராவில் மாலை 5.30 மணிக்கு பிறகு அதிக வாக்குப்பதிவு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் வாக்குச்சாவடிகளில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. 5.30மணிக்கு பிறகு அதிக வாக்குப்பதிவுமில்லை. இந்த இரண்டு விஷயங்களும் இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து திருடுகிறது என்பதை உறுதிப்படுத்துவதாக கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…