“மனுஷன் உண்மையிலேயே ஒசந்துட்டாரு”… தன் வீட்டையே இலவச பள்ளியாக மாற்றிய ராகவா லாரன்ஸ்… வைரலாகும் வீடியோ…!

Spread the love

குரூப் டான்ஸராக இருந்து பிறகு நடன இயக்குனராக தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை பிடித்தவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு இவர் படிப்படியாக நடிப்பு மற்றும் இயக்கம் என பல திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். சினிமாவை தவிர்த்து மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக நடனம் கற்பிப்பது, அவர்களின் நலனுக்காக பல நலத்திட்டங்களை தன்னார்வல நிறுவனங்களுடன் இணைந்து செய்து வருகின்றார். தொடர்ந்து பல உதவிகளை செய்து வரும் ராகவா லாரன்ஸ் சேவையே கடவுள் என்ற அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அந்த அறக்கட்டளையில் லாரன்ஸ் உடன் நடிகர் எஸ் ஜே சூர்யா, நடிகர் பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டவர்களும் செயல்பட்டு வருகிறார்கள். சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பாக மாற்றம் என்ற செயல்திட்டம் ஒன்றை லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை தன்னார்வலர்களின் உதவியோடு செய்து வருகின்றார்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தற்போது தனது வீட்டை இலவச கல்வி பள்ளியாக மாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சனா நான்காம் பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. பாதி சதவீதம் முடிந்து விட்டது. இந்தப் படம் முன்பதிவை வைத்து எனது முதல் வீட்டை குழந்தைகளுக்கான இலவச பள்ளியாக மாற்றியுள்ளேன். உங்கள் பலருக்கும் தெரியும், என்னுடைய படங்களுக்கு நான் ஒவ்வொரு முறையும் முன் பணம் பெற்ற பிறகு என் மனதுக்கு நெருக்கமான ஒரு சமூக அக்கறை முயற்சியை செய்வேன்.

இந்த முறை என்னுடைய முதல் வீட்டை குழந்தைகளுக்கான இலவச கல்வி பள்ளியாக மாற்றியுள்ளேன். இந்த வீடு எனக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனென்றால் நான் டான்ஸ் மாஸ்டராக இருந்தபோது என்னுடைய சேவிங்சில் இருந்து வாங்கிய முதல் வீடு. பிறகு அதை ஒரு அனாதை இல்லமாக மாற்றினேன். இன்று குழந்தைகள் வளர்ந்து வேலை செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டதால் என் வீட்டை மீண்டும் ஒரு நல்ல நோக்கத்திற்காக அர்ப்பணிப்பதில் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

 

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

12 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

13 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

13 மணத்தியாலங்கள் ago