தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகரான எம் ஆர் ராதாவின் மகள்தான் ராதிகா சரத்குமார். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமான ராதிகா அடுத்த இரண்டு ஆண்டுகளில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை கச்சிதமாக தேர்வு செய்து நடித்து வந்தார். பாக்கியராஜ், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என 80 காலகட்டத்தில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய முடிகளிலும் முன்னணி ஹீரோவுகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அதன் பிறகு நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஹீரோயின் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் தொடர்ந்து அழுத்தமான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாகவும் ராதிகா பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய கணவர் சரத்குமாருக்கு மனைவியாகவும் அம்மாவாகவும் சூரியவம்சம் திரைப்படத்தில் நடித்திருப்பார். அதேபோல் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கும் ராதிகா அம்மாவாக நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்துள்ள நடிகை ராதிகா தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளர் என்ற பன்முக திறமை கொண்டவராக வலம் வந்தவர்.
ஓய்வில்லாமல் மிகவும் துறுதுறுவென்று ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டே இருக்கும் ராதிகா தனக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில், என்னை பற்றி அல்லது என் வேலைகளை பற்றியோ ஒருபோதும் பேச மாட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் கொடுமையாக இருந்தது. இரண்டு படங்களின் லொகேஷனில் இருந்தபோது என் முழங்காலில் காயம் ஏற்பட்டதால் இதற்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சை ஆகத்தான் இருந்தது. என் வேலையில் ஒரு மாரத்தான் ஓட தொடங்கியதால் வலி நிவாரணிகள் மற்றும் முழங்கால் பிரேஸ் ஆகியவற்றை அணிந்து வலியுடன் வேலை செய்தேன்.
நான் வலியால் துடித்த போது எனக்கு ஆதரவாக இருந்த என் குடும்பத்திற்கு கடமைப்பட்டுள்ளேன். இந்த மகளிர் தினத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னை பற்றியும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் உங்களை அதிகமாக நேசிக்கவும் உங்கள் வாழ்க்கையை பாராட்டவும் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனைப் போலவே எதிர்ப்புகள் இல்லை என் மிகப்பெரிய தூண் மற்றும் வலிமை தங்க இதயம் கொண்ட என் கணவர் சரத்குமார் ஒரு குழந்தை போல என்னை கவனித்து கொண்டார் என்று ராதிகா பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…