#image_title
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. நாடக உலகில் சிவாஜி, எம் ஜி ஆருக்கெல்லாம் சீனியரான ராதா, 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.
அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா. ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர்.
அவரின் வாரிசுகளான எம் ஆர் ஆர் வாசு, ராதாரவி, ராதிகா ஆகியோரும் சினிமாவில் வந்து கலக்கினர். அதில் ராதாரவியும், ராதிகாவும் இன்றுவரை தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று வருகின்றனர். ராதிகா பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் அற்முகமாகி 80 களிலும் 90 களிலும் கதாநாயகியாக கலக்கினார்.
அதே போல ராதாரவி கே பாலச்சந்தரின் மன்மத லீலை திரைப்படத்தின் மூலம் நடிகரானார். தந்தை வழியைப் பின்பற்றி குணச்சித்திரம் மற்றும் வில்லன் என அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடித்துக் கலக்கினார். 80 களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த அவர் தன் தங்கை ராதிகாவோடு இணைந்து நடித்த படங்கள் பற்றி பேசியுள்ளார்.
அதில் “நான் விஜயகாந்த் மற்றும் ராதிகா ஆகிய மூவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். வீரபாண்டியன் என்ற படத்தில் அவரைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் கூட நடித்திருக்கிறேன். இயக்குனர் துரை கேட்டுக்கொண்டதால் அந்த படத்தில் அப்படி நடித்தேன்” எனக் கூறியுள்ளார்.
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…