ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி அணியை வெற்றிபெறச் செய்தார். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்த அவர், இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற முக்கியக் காரணமாக அமைந்தார்.
சஞ்சு சாம்சனின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைதளமான X தளத்தில் (ட்விட்டர்) நபர் ஒருவர் சஞ்சுவின் நிறத்தைக் குறித்து மிகவும் இழிவான மற்றும் இனவெறி கருத்தைப் பதிவிட்டிருந்தார். “கருப்பானவரால் தான், கருப்பினத்தவர்களை வீழ்த்த முடியும்” (Dark forces can defeat dark forces) என்ற அந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த இனவெறி கருத்தைக் கண்ட இந்திய ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அந்த நபருக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, கேரளா காங்கிரஸ் கமிட்டி இது குறித்து மத்திய அமைச்சரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து, அந்த நபர் தனது இழிவான பதிவை தற்போது நீக்கியுள்ளார்
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் செய்தியில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பதாக…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள தமிழக…
இந்திய அரசியல் வரலாற்றில் பெரும்பான்மை இல்லாத கட்சிகள் ஆட்சி அமைத்திருப்பது ஒன்றும் புதிதல்ல. மத்தியில் பி.வி. நரசிம்ம ராவ், வி.பி.…
திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்புகள் நிலவுவதாகத் தகவல்கள் கசிந்து வரும் நிலையில், விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய தோழமைக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம்…