விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் எந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு பார்வையாளர்கள் யாரும் குறை சொல்லாத வகையில் இந்த நிகழ்ச்சியை அவர் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்கள் உடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று போட்டியாளர் ரயான் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர் ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் எலிமினேஷன் செய்யப்பட்டனர். இதில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றவர்தான் ராணவ். பிக்பாஸ் வீட்டில் முடிந்த அளவிற்கு தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய இவருக்கு மக்களும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர். இப்படியான நிலையில் ராணவ் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் பலருக்கும் சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் அவருக்கு ரசிகர்கள் பலரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் ராணவ் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நான் இப்படி ஒரு அன்பை எதிர்பார்க்கவே இல்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும்போது யார் என்ன சொன்னாலும் அதை அமைதியாக எடுத்துக் கொள்வோம் என்ற எண்ணத்தில் தான் நான் வெளியில் வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது எல்லோரும் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று.
தொடர்ந்து போனில் எனக்கு மெசேஜ் வந்து கொண்டிருக்கிறது. எத்தனை பேருக்கு பதில் சொல்வது நன்றி சொல்வது என்று எனக்கே தெரியவில்லை. என்னுடைய பலமே நீங்கதான். என்ன அந்த அளவுக்கு பீல் பண்ண வச்சிட்டீங்க. உங்க எல்லாரையும் கண்டிப்பா நான் நேர்ல சந்திச்சு பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறி ராணவ் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…