திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் முன்னிலையில் மூத்த நிர்வாகிகள் இணைந்து வரும் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். அதிமுகவில் தலைமை மீது ஏற்பட்ட சிறு மனத்தாங்கல் காரணமாகவே சிலர் தவெகவில் இணைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும் நெடுஞ்செழியன், எஸ்டிஎஸ் போன்ற தலைவர்கள் தற்காலிகமாகப் பிரிந்து சென்று, பின்னர் தெளிவு பெற்று மீண்டும் தாய்க்கழகத்திற்கே திரும்பிய வரலாற்றைச் சுட்டிக்காட்டினார். மேலும், முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்த காட்சியைக் கண்டு சில ‘சில்லறைப் பசங்க’ சிரிப்பது வேதனையளிப்பதாகக் கூறிய அவர், “நாங்கள் தோற்றுத்தான் போயிருக்கிறோம், செத்துப்போகவில்லை” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்த உதயகுமார், “விஜய் தம்பி, நீங்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னால் கூவி அழைத்தபோது ஒரு காக்கா, குருவி, லெட்டர் பேடு கட்சி கூட உங்களை நம்பி வரவில்லை. ஆனால், இன்றைக்கு உங்களை நோக்கி ஓடி வருபவர்கள் வெறும் அதிகாரத்தை மட்டுமே தேடி வருகிறார்கள். உங்களைத் தேடி வருபவர்களை வைத்துக் கொண்டு உங்களுக்குப் பின்னால் என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் அதற்கு அதிமுகவோ அல்லது நாங்களோ பொறுப்பல்ல” என்று அதிரடி எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், “உங்களைத் தேடி ஓடி வருபவர்களுக்கும் இன்னும் 10 மாதம்தான், எங்களுக்கும் இன்னும் 10 மாதம்தான். எங்களுக்கும் ஒருமுறைதான் இறப்பு விஜய் தம்பி” என்றும் சவால் விடுத்தார்.
செய்தியாளர்கள் அவரிடம், “விஜய்க்கு ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை என்கிறீர்களே, அப்படி என்ன நடந்துவிடப் போகிறது? விஜய் கடும் விளைவுகளைச் சந்திப்பார் என்று சொல்வதன் அர்த்தம் என்ன?” என்று அடுத்தடுத்துக் கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த உதயகுமார், “நான் இதை ஒரு எச்சரிக்கையாகத்தான் சொல்கிறேன். விஜய் என்ன விளைவுகளைச் சந்திப்பார் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள், உங்களுக்கே தெரியும்” என்று மர்மம் விலகாமல் முடித்துக் கொண்டார். முன்னாள் அமைச்சரின் இந்த ஆக்ரோஷமான மற்றும் எச்சரிக்கை கலந்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுக – தவெக இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…
ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…