அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளராகச் செயல்பட்டு வந்த ஷகிலா பானு மற்றும் அவரது கணவர் இம்தியாஸ் ஆகியோர், சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் தலைமையகத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாகத் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர்களுக்குக் கட்சி வேட்டி மற்றும் பொன்னாடை அணிவித்து முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டணிச் சூழலில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து ஐயூஎம்எல் கட்சியில் இணைந்து வரும் வேளையில், அதிமுகவின் முக்கியப் பேச்சாளரான ஷகிலா பானுவின் இந்த இணைப்பு அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…
நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…
சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…