தெலுங்கு திரை உலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவரை பான் இந்தியா ஹீரோவாக உயர்த்திய திரைப்படம் தான் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக இப்படம் பாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் பாக்ஸ் ஆபீஸில் 350 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. புஷ்பா படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் விருதுகளையும் குவித்தது. இந்த படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்த படக்குழு கடந்த மூன்று ஆண்டுகள் கடின உழைப்புக்கு பிறகு புஷ்பா 2 திரைப்படத்தை டிசம்பர் 5ஆம் தேதி நேற்று உலகமெங்கும் திரையரங்குக்கு கொண்டு வந்தது. இந்தப் படத்திலும் மாஸ் காட்சிகள் துள்ளலாக இருப்பதால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். புஷ்பா 2 திரைப்படம் முன்பதிவிலேயே சுமார் 100 கோடிக்கு மேல் வசூலித்தே பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த நிலையில் இந்த திரைப்படம் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி இந்தியாவிலேயே இப்படம் முதல் நாளிலேயே 165 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய திரை உலக வரலாற்றிலேயே இதுவரை முதல் நாளில் எந்த படமும் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்தது இல்லை. இதன் மூலம் ஒரு பான் இந்தியா ஸ்டார் என்பதை அல்லு அர்ஜுன் மீண்டும் நிரூபித்துள்ளார். அதே சமயம் RRR மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் இந்தியாவில் 100 கோடிக்கு மேல் முதல் நாளில் வசூலி திறந்த நிலையில் தற்போது புஷ்பாட்டு திரைப்படம் அவற்றின் சாதனையை முறியடித்து முதல் நாளிலேயே 165 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. உலக அளவில் 250 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது 1
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…