லக்னோ (LSG) அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் தங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இப்போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த அதிரடியான வெற்றியைத் தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு சினிமா காட்சிகளை ஒப்பிட்டு நகைச்சுவையான மீம்ஸ்களைப் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
அவற்றில் குறிப்பாக, ‘மகான்’ திரைப்படத்தில் விக்ரமை பார்த்து பாபி சிம்ஹா பேசும் “நம்மளை காப்பாற்ற வந்த தேவதூதன்டா அவன்” என்ற வசனத்தை ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டத்தோடு ஒப்பிட்டு ரசிகர்கள் மீம்ஸ் உருவாக்கியுள்ளனர். எப்படியாவது தங்களை பிளே ஆஃப் சுற்றுக்கு கூட்டிட்டு போய்விடுமாறு பஞ்சாப் அணி ரசிகர்கள் வேண்டுவது போல் இந்த மீம் அமைந்துள்ளது. மேலும், ‘கும்கி’ திரைப்படத்தில் தம்பி ராமையா பேசும் நகைச்சுவை காட்சியை சிஎஸ்கே, மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளின் தற்போதைய நிலையை ஒப்பிட்டும், ‘அள்ளித் தந்த வானம்’ படத்தில் வடிவேலுவின் மண்ணெண்ணெய் காமெடி காட்சியை வைத்து சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் கேட்ச்சை கோட்டைவிட்ட வீரர்களைப் பார்த்து நொந்து கொள்வது போன்றும் மீம்கள் பரவி வருகின்றன.
இதுமட்டுமின்றி, ‘தமிழ்ப்படம்’ திரைப்படத்தில் வரும் பிரபல காமெடி வசனமான “இது நம்ம ரமணா இல்ல.. வேற ரமணா” என்பதை மாற்றி, கிரிக்கெட் மைதானத்தில் அஜித் குமார் விளையாடுவதை சிஎஸ்கே ரசிகர்கள் ‘தல.. தல..’ என்று அழைக்க, அதற்கு ஐயர் “இது நம்ம தல (தோனி) இல்ல.. வேற தல” என்று கூறுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகம் (தவிக) அண்மையில் புதிய அமைச்சரவையைப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில்…
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.…
இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் கடும் வெயில் காரணமாக ஏற்பட்ட…
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும்,…
தமிழக அரசியலில் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில், தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்து, அவருடைய தமிழக வெற்றிக்…
பாமகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அண்மையில்…