Categories: சினிமா

என் இடத்துல வேறு யாராவது இருந்தால் தற்கொலை பண்ணி இருப்பாங்க… புலி படத்தால் எல்லாமே போச்சு…. ஆனா விஜய்க்கு…. மனம் திறந்து பேசிய செல்வகுமார்…!!

Spread the love

பிரபல தயாரிப்பாளரும் விஜயின் முன்னாள் மேனேஜருமான PT செல்வகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் புலி படம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, புலி திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு நாள் முன் வருமான வரித்துறை ரைட் நடத்தியது. அது ஒரு சூழ்ச்சி. ரைடு காரணமாக படம் ரிலீஸ் ஆகாது என செய்தி வந்தது. எனக்கும் ஒரு குடும்பம் உள்ளது.

முதல் முறையாக ஆசையோடு பாசத்தோடு ஒரு படம் வாங்கி எப்படியாவது மேலே வந்து விடலாம் என நான் கனவு கண்டேன். எனது 27 வருட உழைப்பு ஒரே திரைப்படத்தில் நொறுங்கிப் போனது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் என்ன பெரிய வீட்டுப் பிள்ளையா? எங்கேயாவது கொள்ளையடித்து வைத்திருக்க கூட்டமா?

உழைத்து முன்னேற வேண்டும் என்கிற நோக்கத்துடன் வாழ்பவன். எனது சொத்துக்களை விற்பனை செய்தாவது படத்தை ரிலீஸ் செய்வேன் என உறுதியோடு நின்றேன். பல பிரச்சனைகளை கடந்து புலி படத்தை ரிலீஸ் செய்தேன். ஆனால் படம் அட்டர் பிளாப். கண்ணீரும் கவலையுமாக இருந்தேன்.

வேறு யாராவது இருந்தால் கண்டிப்பாக தற்கொலை தான் செய்திருப்பார்கள். படம் ரிலீஸ் ஆன 5,6 நாட்கள் என்னை விஜய் கிட்ட பேசவே விடல. அந்த திரைப்படத்திற்கு பிறகு விஜயின் சம்பளம் இரண்டு மடங்கு ஆனது. படம் தோல்விதான்.

ஆனால் அந்த படத்திற்கு தான் பிரச்சனை. இந்த படத்திற்கு 25 கோடி சம்பளம் என்றால் அடுத்த படத்திற்கு 45 கோடி சம்பளம் கொடுத்து தாணு விஜயை புக் செய்தார். ஆனால் நம்மை துரோகிகளாக தோல்வியடைந்தவனாக ஒதுக்க பார்க்கிறார்கள். பல ரகசியங்களை சொல்ல முடியாது என செல்வகுமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

2 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

2 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

2 மணத்தியாலங்கள் ago