தமிழ் சினிமாவில் வார்த்தை வித்தகன் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் தான் நடிகர் பார்த்திபன். ஒரு நடிகராக இயக்குனராக பல திரைப்படங்களில் தன்னுடைய ஆளுமையை இவர் காட்டியுள்ளார். முதலில் பாக்கியராஜ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவ்வாறு அதன் பிறகு தான் இயக்குனராக உருவெடுத்தார். அதே சமயம் ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து பிறகு ஹீரோவாக தன்னை மாற்றிக் கொண்டார். புதியபாதை, உள்ளே வெளியே, ஒத்த செருப்பு, குடைக்குள் மழை, வித்தகன் மற்றும் ஹவுஸ்புல் போன்ற திரைப்படங்களை பார்த்திபன் இயக்கி அவரே நடிக்கவும் செய்துள்ளார்.
இவருடைய சில திரைப்படங்கள் வணிகரீதியாக வெற்றி தராவிட்டாலும் கதை திரைக்கதை அடிப்படையில் மாநில அரசின் விருது போன்ற ஒரு சில விருதுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் அவர் இயக்கி நடித்த படமான வித்தகன் திரைப்படத்தைப் பற்றி அப்ப படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 2011 ஆம் ஆண்டு வெளியான வித்தகன் திரைப்படத்தை பார்த்திபனை இயக்கி அவரே நடிக்கவும் செய்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி மிகவும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
இப்படத்தின் தோல்வி குறித்து பேசி உள்ள தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், வித்தகன் படத்தின் போது பார்த்திபன் என ஒரு வருஷம் வச்சி சாவடிச்சான். இவங்க எல்லாம் மனசாட்சியே இல்லாத மனுசங்க. அடுத்தவன் கஷ்டத்துல சந்தோஷப்படுற ஆளுங்க. நான் தெரியாம அந்த படத்துல போய் மாட்டிக்கிட்டேன். கொடுத்த வார்த்தையை காப்பாத்தணும் என்பதற்காக அப்ப அறிவே இல்லாம போய் நான் பார்த்திபன் கிட்ட சிக்கிட்டேன்.
சினிமாவை பொறுத்த வரைக்கும் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற ஆளுங்க யாருமே கிடையாது. பார்த்திபன் என்ன அந்த அளவுக்கு ஏமாற்றுவார் என்று எனக்கு தெரியாது. கண்ண மூடிக்கிட்டு உலகம் இருட்டுன்னு நினைச்சுட்டேன். அறிவும் இல்ல அனுபவமும் இல்லை. எல்லாரும் தில்லுமுல்லு பேரொளிங்க. அத கொஞ்சம் கொஞ்சமா தான் நான் கத்துக்கிட்டேன் என்று பார்த்திபனுடன் பயணித்த அனுபவம் குறித்து மாணிக்கம் நாராயணன் பேசியுள்ளார்.
டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…
போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…