அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில், 27 வயதான டாசன் ஜேம்ஸ் பிரவுன் என்ற பாதிரியாரின் மகன், தங்கள் வீட்டில் தங்கியிருந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றத்தை மறைப்பதற்காக டாசனின் தாயாரான சப்ரினா, அதிகாரிகளைத் திசைதிருப்பும் நோக்கில் போலி டிஎன்ஏ தரவுகளை உருவாக்குமாறு வற்புறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கென்ட்ரெல் பௌடனும், குற்றவாளியிடமிருந்து பணம், வாகனம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற்றுக்கொண்டு இந்த அநீதியை மறைக்க உடந்தையாக இருந்துள்ளார்.
சிறுமியின் கைபேசியில் இருந்த பாலியல் வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்த துப்பறிவாளர்கள், இந்த வழக்கில் தொடர்புடைய டாசன், அவரது தாய் சப்ரினா மற்றும் சிறுமியின் தாய் பௌடன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் உண்மை அம்பலமானதைத் தொடர்ந்து, குற்றவாளி டாசன் நாட்டை விட்டுத் தப்பத் திட்டமிட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது சிறுவர் வன்கொடுமை, மனிதக் கடத்தல் மற்றும் ஆதாரங்களை அழிக்க முயன்றது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…
கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…
தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…
பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…