2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யும் ஒரு தேர்தலாக இருக்கும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டு பணிகள் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநாட்டுப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தொண்டர்களை அழைத்து வருவது, மாநாட்டிற்கு ஏற்பாடுகள் மற்றும் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது, கூட்டணி குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வாக்குப்பெட்டி வைத்து கட்சியின் மாவட்ட செயலாளர்களிடம் பிரேமலதா கருத்து கேட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ராஜ்ய சபா சீட் ஏற்கனவே பேசப்பட்டது. அது ஒரு புறம் இருக்கட்டும். எங்களின் கவனம் சட்டமன்ற தேர்தலை நோக்கி தான் இருக்கும். அனைத்து கட்சிகளுமே எங்களுக்கு தோழமை கட்சிகள் தான். அனைவரும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றனர். மாவட்ட செயலாளர்களின் கருத்தைப் பொறுத்து கூட்டணி அமையும்.
மாவட்டச் செயலாளர்களின் கருத்துக்களை படித்த பிறகு கூட்டணி முடிவு செய்யப்படும். மாவட்டச் செயலாளர்களின் ஒவ்வொரு வாக்குச்சீட்டையும் நானே எடுத்து பார்த்தேன் நிர்வாகிகளின் முடிவுப்படி கூட்டணியை அமைப்பேன். லோக்சபா தேர்தலின் போது ஏற்படுத்தப்பட்ட கூட்டணியை நாங்கள் ஒதுக்கி வைக்கின்றோம். அந்த கூட்டணி கிடையாது. இன்று எங்கள் மாவட்ட செயலாளர்கள் தங்கள் விருப்பமான கூட்டணிக்கு வாக்களித்த கருத்து கணிப்பு நடத்தினோம். இது பற்றி ஜனவரி ஒன்பதாம் தேதி அறிவிப்போம் என்ற பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…