தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன. ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் பிரேமலதாவை திருமணம் செய்துகொண்ட நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பிரேமலதா, “எங்களுக்கு திருமணமாகி முதலில் வந்ததும் கேப்டன் என்னிடம் சொன்ன முதல் வார்த்தை நான் படிக்கல, நீ படிச்சிருக்க அதனால என் பிள்ளைங்களை படிக்க வச்சி டிகிரி வாங்க வச்சிருன்னு சொன்னாரு. அவரோட ஆசையை நிறைவேத்திட்டேன்” என்றுகூறியுள்ளார் .
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…