தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தவிர்க்க இயலாத பாடல் ஆசிரியர்களின் ஒருவர்தான் சினேகன். தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராக அவர் பணியாற்றி வந்தாலும் தமிழ் சினிமாவில் பலராலும் மறக்க முடியாத பல நல்ல பாடல்களை கொடுத்துள்ளார்.
திருச்செல்வம் என்ற பெயரோடு சென்னைக்கு வந்த இவர் வைரமுத்துவிடம் தான் பல ஆண்டுகளாக பணியாற்றினார். அப்போதுதான் சினேகன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான புத்தம் புது பூவே என்ற திரைப்படம் மூலம் கடந்த 1997 ஆம் ஆண்டு பாடல் ஆசிரியராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
2001 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான பாண்டவர் பூமி என்ற திரைப்படம் மூலம் தான் பாடலாசிரியர் சினேகனுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.
அந்தப் படத்தில் அவரவர் வாழ்க்கையில், அழகான தடுமாற்றம், சின்ன வயசுல, தோழா தோழா கனவு தோழா மற்றும் தாயே உன்னையே ஆகிய ஐந்து பாடல்களையும் எழுதியது சினேகன் தான். அந்தப் பாடல்கள் அனைத்துமே இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக உள்ளன.
தொடர்ந்து தமிழ் திரை உலகில் சிறந்த பாடல் ஆசிரியராகவும் நடிகராகவும் பணியாற்றி வரும் சினேகன் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டார்.
சின்னத்திரையில் பிரபலமான நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை கன்னிகா ரவியை சினேகன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஊரே வியக்கும் அளவுக்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இப்படியான நிலையில் சமீபத்தில் தான் கனிகாவிற்கு மிக பிரம்மாண்டமாக வளைகாப்பு விழா நடந்து முடிந்தது. அதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கன்னிகா தனது கணவர் சினேகனுடன் இணைந்து எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…