“இனிதே ஆட்டம் ஆரம்பம்”…. பெங்களூருவில் நடிகர் பிரகாஷ்ராஜின் வாக்குரிமை பறிப்பு…. அவரே வெளியிட்ட பரபரப்பு வீடியோ….!

Spread the love

கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் நடவடிக்கையின் போது, பெங்களூரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் அதிர்ச்சி குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், “அன்பான நண்பர்களே, உங்களுடன் ஒரு நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். SIR நடவடிக்கைக்குப் பிறகு பெங்களூரு தொகுதியில் வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். இது நல்ல நகைச்சுவை இல்லையா? நான் இந்தத் தொகுதியில்தான் பிறந்தேன், வளர்ந்தேன், எனது பள்ளி, கல்லூரி படிப்புகள் மற்றும் நாடகப் பயிற்சிகளை இங்குதான் மேற்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரத்தில் இருப்பவர்களை விமர்சிக்கும் வகையில், தங்களுக்கு வாக்களிக்காத மக்களின் வாக்குரிமையை நீங்கள் பறிக்கலாம், ஆனால் உங்களை வீழ்த்துவதற்கான மக்களின் சக்தியை யாராலும் தடுக்க முடியாது என்றும், “இனிதே ஆட்டம் ஆரம்பம்” என்றும் அவர் ஆவேசமாக சவால் விடுத்துள்ளார்.

https://www.instagram.com/reel/Db4rx-CSKNB/?utm_source=ig_embed&ig_rid=AroCv733cbnyziek5l9_9GN

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் போட்டியிட்ட தொகுதியிலேயே தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், தனது வாக்காளர் அடையாள அட்டையை மீண்டும் பெற என்னென்ன ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும் என்ற நடைமுறைகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக எழும் புகார்களுக்கு மத்தியில், பிரகாஷ் ராஜின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

புது தொடக்கமா?… எவ்வளவு சொல்லியும் கேட்காத விஜய்… ஒரே மேடையில் த்ரிஷாவுடன் மாஸ் என்ட்ரி… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…

3 minutes ago

நடுக்கடலில் சிக்கிய ரூ.3,000 கோடி… போதைப்பொருள் பணத்தில் ஆயுத கடத்தலா?… அம்பலமான சதி… உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…

15 minutes ago

என்ன காரணமா இருக்கும்?… ஒரு போன் கால்… உச்சக்கட்ட சந்தேகம்… மனைவிக்கு தீ வைத்த கணவன்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…

29 minutes ago

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

38 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

1 மணத்தியாலம் ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

1 மணத்தியாலம் ago