தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சமீப காலமாகவே ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என குரல் எழுப்பி வருவதால் ஸ்டாலினுக்கு இது பெரிய சிக்கலாகவே மாறி உள்ளது. கூடுதல் தொகுதிகளை ஸ்டாலின் ஒதுக்காத பட்சத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள நிலையில் திமுகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. அதேசமயம் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு ராகுல் காந்தியை சம்மதிக்க வைக்கும் முயற்சிகளும் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்து சில தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்வதாக தெரிகிறது. இந்நிலையில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி அளித்த பேட்டியில், விஜய்யை சந்தித்தது உண்மைதான், காங்கிரஸ் யாருடன் கூட்டணி என்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…