விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே வரவேற்பு பெற்ற போட்டியாளராக இருந்து வந்தவர் பிரதீப் ஆண்டனி. இந்நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி சக போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்பட்டு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார்.
தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் ரெட் கார்ட் கொடுத்து எந்த ஒரு போட்டியாளரும் வெளியேற்றப்படாத நிலையில், தற்போது பிரதீப் வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. இந்நிலையில், பிரபலங்களும், ரசிகர்களும், விஜய் டிவி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் என பலரும் தங்களது எதிர்ப்பை இணையத்தில் பதிவு செய்தனர்.
அதுமட்டுமின்றி அவருக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களும், பதிவுகளும் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து பிரதீப்பும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் சுரேஷ் சக்ரவர்த்தியுடன் லைவ்வில் கலந்து கொண்டு தனது காதலியை அறிமுகப்படுத்தியிருந்தார்.
இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் இவர் தான் கோவாவிற்கு சென்று புதிய கதை ஒன்று எழுதி இயக்குனராக களமிறங்க இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து கோவாவிற்கு பிளைட்டில் செல்லும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இப்படி தொடர்ந்து பதிவுகளை வெளியிடும் அவர் தற்பொழுது கோவாவில் தனது காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் படுவைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…