#image_title
அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் டிராகன் படத்தின் தலைப்பிற்கு புதிய சிக்கல் வந்துள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக கலக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக களம் இறங்கிய இவர் முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தார்.
இந்த படம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக அமைந்தது. அதை தொடர்ந்து லவ் டுடே என்ற திரைப்படத்தை தானே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து தமிழ் சினிமாவையே இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டார். இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கின்றார். இப்படத்தின் சூட்டிங் கடந்த ஆறாம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தின் டைட்டில் மிகவும் ஃபயராக இருக்க வேண்டும் என்று முன்னதாக கல்பாத்தி அர்ச்சனா கூறி இருந்த வீடியோ ஒன்று வெளியாகி இருந்த நிலையில் படத்தின் டைட்டில் நெருப்புடன் வெளியானது.
இப்படத்திற்கு டிராகன் என்று பெயரிட்டு இருக்கின்றார். இப்படத்தின் முதல் கட்ட சூட்டிங் கடந்த 13ஆம் தேதியுடன் நிறைவடைந்து. இந்நிலையில் அடுத்த ஷெடுலுக்காக காத்திருக்கின்றார். இதைத்தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனின் எல்ஐசி படத்தின் ஷூட்டிங்கில் இணைந்து இருக்கின்றார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் மீண்டும் இணைவார் என்று கூறப்படுகின்றது.
இப்படி தொடர்ந்து படத்தில் பிஸியாக நடித்த வருகிறார் பிரதீப் ரங்கநாதன். மேலும் இப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றாராம். காரணம் லவ் டுடே திரைப்படம் நவம்பர் மாதம் தான் வெளியானது. இதனால் சென்டிமென்டாக டிராகன் திரைப்படமும் நவம்பர் மாதம் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
அதை தொடர்ந்து தற்போது புதிய சிக்கலும் இப்படத்திற்கு வந்துள்ளது. தெலுங்கில் கேஜிஎப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் ஜூனியர் என்.டி.ரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கிய வருகிறார். அந்தப் படத்தின் டைட்டிலும் டிராகன் என வைக்கப்பட்டுள்ளதால் பட குழுவினர் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இப்படத்தின் டைட்டிலை விட்டுக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இதனால் படக்குழுவினர் சற்று குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…
தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…