#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் ‘லியோ 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. தமிழ் திரையுலகில் இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. இன்று தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் விஜய் ஹிட் கொடுக்க சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
விஜய்யின் திரை வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது பூவே உனக்காக. ஒரு தலை காதல் பற்றி 1996 இல் வெளி வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்தில் தான் காதலித்த பெண் வேறு ஒருவரை காதலித்ததால் அவரை அவருடன் சேர்த்து வைத்து தன்னுடைய காதல் வெற்றி பெறாவிட்டாலும் அந்த பெண்ணாவது சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார் விஜய்.
இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் விஜய் தன்னை ஏற்க முன்வரும் பெண்ணை ஏற்றுக்கொள்ளாமல் தன்னுடைய பழைய காதலியின் நினைவோடு பிரிந்து சென்றுவிடுவார். இந்த கிளைமேக்ஸ் அப்போது ரசிகர்களால் பெரியளவில் கொண்டாடப்பட்டது.
இந்த கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கியது குறித்து இப்போது இயக்குனர் விக்ரமன் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்படி “படத்துக்கு அவர் இரண்டு கிளைமேக்ஸை சொன்னாராம். அதில் ஒன்று அவர் சங்கீதாவை ஏற்றுக்கொண்டு அவரை திருமணம் செய்துகொள்வது. அதைதான் எடுக்க வேண்டும் என ஆர் பி சௌத்ரி கூறிவிட்டாராம்.
ஆனால் அந்த கிளைமேக்ஸில் விக்ரமனுக்கு உடன்பாடு இல்லையாம். படம் பார்த்து செல்பவர்கள் ஒரு பாரத்தோடு செல்ல வேண்டும் என நினைத்தாராம். அதனால் ஆர் பி சௌத்ரிக்கு தெரியாமல் வெறும் ஒரு மணிநேரத்தில் இப்போதிருக்கும் க்ளைமேக்ஸ் காட்சியை எடுத்தாராம். அதை கேள்விப்பட்ட ஆர் பி சௌத்ரி கோபித்துக் கொண்டு போய்விட்டாராம். பிறகு அவரை சமாதானப்படுத்தி இந்த காட்சியை படத்தில் இணைத்தாராம். படம் ரிலீஸாகி பிக்கப் ஆன போது படத்துக்கு அந்த க்ளைமேக்ஸ்தான் ஹைலைட்டாக அமைந்ததாம்”
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…