Categories: சினிமா

தமன்னாவுக்கே டப் கொடுப்பாங்க போலயே.. காவாலாவுக்கு போட்டியாக ரஜினியின் கூலி படத்தில் களமிறங்கும் விஜய் பட நடிகை…!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவருடைய நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் நாகார்ஜுனா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு மே மாதம் திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது. கூலி திரைப்படத்தை முடித்த கையோடு ரஜினி மூன்று மாதம் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் தன்னுடைய சுயசரிதையை எழுத முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள ஜெய்லர் 2 படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் முதல் பாகத்தை விட மிக பிரம்மாண்டமாக ஜெயிலர் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

இப்படியான நிலையில் ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு நடனமாடிய பிறகுதான் தமன்னா உலக அளவில் பிரபலமானார். முன்னணி நடிகையாக இருந்தாலும் துணிந்து ஐட்டம் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். அந்தப் பாடலை தொடர்ந்து உலகம் முழுவதும் தமன்னா பிரபலமானார். இன்னும் சொல்லப்போனால் ஜெயிலர் திரைப்படத்திற்கு இந்த பாடல் தான் பெரிய ஹைப்பை கொடுத்தது. இப்படியான நிலையில் ரஜினி நடித்து வரும் அடுத்த படமான கூலி திரைப்படத்திலும் இப்படி ஒரு பாடல் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கூலி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இந்த படத்தில் ஐட்டம் பாடலுக்கு விஜய் பட நடிகை நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நடிகை வேறு யாருமில்லை பூஜா ஹெக்டே தான். தற்போது இவர் விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகம் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து வரும் நிலையில் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னாடி நடிகையாக இருக்கும் இவர் ரஜினிக்காக கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

அலெர்ட்..! கோடை வெயிலில் தவறியும் “பாராசிட்டமால்” மாத்திரை போடாதீங்க… பொதுச் சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…

2 minutes ago

காலையிலேயே ஷாக்… இந்தியாவுக்குக் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து… குவைத்தின் அதிரடி முடிவால் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி…!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…

3 minutes ago

“ஆப்புன்னு நினைச்சா அதிர்ஷ்டம்” ட்ரம்ப் போட்ட ஸ்கெட்ச்… இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 1 லட்சம் கோடி லாபம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…

6 minutes ago

“ஈரான் மீது குண்டு வீச தயார்!” – உலகை அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் ஓப்பனாக வார்னிங்… ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த கடைசி 24 மணிநேர கெடு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…

6 minutes ago

“கண்ணை மூடு.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்”… காதலியின் பேச்சை நம்பிய இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. பெங்களூரை நடுங்க வைத்த சம்பவம்…!

பெங்களூரில் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறி, காதலனை வீட்டிற்கு வரவழைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

9 minutes ago

வாக்காளர்களைத் தொந்தரவு செய்தா தலைகீழாக கட்டித் தொங்கவிடுவோம்… அமித் ஷாவின் அதிரடி ‘வார்னிங்..!!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…

10 minutes ago