தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ரொக்க பணமும் வழங்கப்படும் நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ரொக்கம் வழங்கப்படவில்லை. இதனிடையே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனிடையே வருகின்ற ஜனவரி 8 ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரொக்கப் பணம் கிடையாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே ரூ.3,000 ரொக்கப் பணம் அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என்றும் தனி அரசாணை பிறப்பிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதைத் தடுக்கும் உள்நோக்கத்துடன் ஆளுநர் அனுமதி மறுத்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்தாலும், திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…
மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…
தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…