2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தங்களின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துகொள்ளும் நோக்கில் ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் இந்த முறை தங்களின் தொகுதிகளை மாற்றத் திட்டமிட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தரப்பில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்குத் தொகுதிக்கு மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை அல்லது திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஏதேனும் ஒரு தொகுதியைக் குறிவைத்து களம் காணத் தயாராகி வருகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் தங்களுக்குச் சாதகமான தொகுதிகளைத் தேர்வு செய்யும் முனைப்பில் உள்ளனர்.
திமுகவைப் பொறுத்தவரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது தற்போதைய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை விட்டுவிட்டு, மறைந்த முதல்வர் கருணாநிதியின் கோட்டையான திருவாரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும், அமைச்சர் பொன்முடி தனது மகனுக்காகத் தனது தற்போதைய தொகுதியான திருக்கோவிலூரை விட்டுவிட்டு, விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் முக்கியப் புள்ளியான சிவி சண்முகம் விழுப்புரத்திற்குப் பதிலாக மயிலம் தொகுதியைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளார். இதேபோல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முறை எப்படியாவது சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்ற உறுதியுடன் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையின் காரைக்குடி தொகுதியைக் குறிவைத்துள்ளார். இத்தகைய வியூக மாற்றங்கள் வரவிருக்கும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…