சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டார். அவரின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த காவல்துறையினர் அவருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் போதைப்பொருள் விற்பனை செய்த சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கையின் போதை பொருள் வாங்கி பயன்படுத்துவது தெரிய வந்தது. பிறகு அவரை அழைத்து விசாரித்த போது அவர் ஒப்புக்கொள்ளாததால் ரத்த பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்தை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் தற்போது அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் விவகாரத்தில் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்தது. அவருடைய பணப்பரிவர்த்தனை மற்றும் செல்போன் தொடர்புகளை வைத்து கிருஷ்ணாவை விசாரிக்க திட்டமிட்டனர். வழக்கு குறித்து விசாரணை நடத்த கிருஷ்ணாவை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் ஸ்விச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சமன் அனுப்பப்பட்டது. கேரளாவிற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியானது. அவரை பிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். இப்படியான நிலையில் போலீசில் சிக்கியுள்ள கிருஷ்ணாவிடம் துருவி துருவி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால் அவர் கைது செய்யப்படுவார். தற்போது கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பல அதிர்ச்சி நிறைந்த தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.
நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…
தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும்…
சமூக வலைதளங்களில் தொடங்கும் ஒரு சாதாரண நட்பு, நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதை அண்மைய உளவு…
இந்த விபத்திற்கான இழப்பீட்டுப் பொறுப்பு லாரி ஓட்டுநரைச் சேராது; வணிக ரீதியான சரக்குப் போக்குவரத்தில் இத்தகைய இழப்புகள் முழுமையாகக் காப்பீடு…
டெல்லியின் நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே ஐந்து மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில்…
சென்னையில் உள்ள முக்கிய மற்றும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான திருவான்மியூர் டைடல் பார்க் அருகே, திடீரென சாலையில் பெரிய பள்ளம்…