தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாட்டாளி மக்கள் கட்சிக்குள் தலைமைப் பொறுப்பு தொடர்பாக நிலவி வரும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் தலைவராகத் தன்னை அங்கீகரிக்கும் வரை தேர்தல் அறிவிப்பைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும், அதுவரை கட்சியின் சின்னமான ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் கோரி டாக்டர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, டாக்டர் ராமதாஸின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. குறிப்பாக, மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய அவரது கோரிக்கையை நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்த அதிகாரப் போட்டியில், தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, இது போன்ற உட்கட்சி விவகாரங்களை உரிய உரிமையியல் (Civil) நீதிமன்றத்தில்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின்படி, அன்புமணி ராமதாஸே பாமகவின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாம்பழம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றமும் ராமதாஸின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது அவருக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் மாற்றம் செய்ய முடியும் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், பாமகவின் இரு அணிகளும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றன. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. எனினும், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தேர்தல் பணிகளில் அன்புமணி தரப்பிற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…