தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக என்ற நிலைமை மாறி தற்போது விஜய்யும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். பிரதான கட்சிகளின் வெற்றியே கூட்டணி கட்சிகளை நம்பி தான் இருக்கின்றன.
இதனிடையே பாமகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை ராமதாஸ் வெளியிடவில்லை. அதேசமயம் பாமக தலைவராக அன்புமணியை EC அங்கீகரித்தது. இதனை பின்னடைவாக கருதிய ராமதாஸ் அன்புமணியை அடக்க டெல்லி செல்வதே ஒரே வழி என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள தைலாபுரம் இல்லத்திற்குச் சென்று ராமதாசை அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். கடந்த வாரம் சிவி சண்முகத்தை நயினார் நாகேந்திரன் சந்தித்திருந்தார். இதை அடுத்து பாமக உடன் விரைவில் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கும் எனவும் கூறி இருந்தார். இந்நிலையில் ராமதாஸ் மற்றும் சண்முகம் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…