பிரபல முன்னணி பாடகியாக திகழ்ந்த சுசித்ரா இதுவரை ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இவர் நடிகர் கார்த்திக் குமாரை முதலில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு பாதியிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். சில வருடங்களுக்கு முன்பு கோலிவுட்டையே பரபரப்பாகிய சம்பவம் என்றால் அது சுச்சி லீக்ஸ். அதில் திரை உலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகிறது. அந்த சமயத்தில் சுஜித்ரா மனநலம் பாதிக்கப்பட்டதாக கார்த்திக் குமார் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் சமீப காலமாக சுசித்ரா மீண்டும் பேட்டரிகளை சரளமாக கொடுத்து வருகின்றார்.
அனைத்து நடிகர்களையும் இவர் விமர்சிக்க தொடங்கி விட்டார். சமீபத்தில் கூட இவர் மீது ரீமா கல்லிங்கள் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் சுசித்ராவின் பார்வை தற்போது ஆண்ட்ரியா பக்கம் திரும்பி உள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் சுசித்ரா அளித்த பேட்டியில், மேடையில் பாடும் கலாச்சாரத்தையே ஆண்ட்ரியா கெடுத்துவிட்டார். அவர் பாடும் போது கேமரா முன் வந்து ஆடுவது போன்ற வேலையெல்லாம் செய்கின்றார்.
அதெல்லாம் ரொம்பவே மோசம். அவர்களைப் போன்றோர் மேடையில் பாடுவதால் தான் என்னை போன்ற கூச்சமுடையவர்களுக்கு மேடையில் பாடல் பாடுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போகின்றன. அவரைப் போல் எல்லாம் மேடையில் நம்மால் பாட முடியாது. அவர் மேடையில் பாடுவது மட்டுமல்லாமல் பல வேலைகளையும் செய்கிறார். அவர் பாடுவதை கேட்பதற்கு கூட்டம் செல்வதில்லை அவரை பார்க்கத்தான் செல்கிறது. மேடையில் பாட வேண்டும் என்றாலே அப்படி இருக்க வேண்டும் என்ற உருவாக்கி விட்டார்கள்.
அப்படி உருவாக்கி வைத்திருக்கும் போது நாங்கள் எல்லாம் எப்படி பாட முடியும். மக்களும் தற்போது அதை தான் எதிர்பார்க்கின்றனர். மேடையில் பாடும் பாடகிகளின் ஆடைகளும் ரொம்ப மோசமாக உள்ளது. முக்கியமாக ஆண்ட்ரியா பாடும் போது எல்லோரும் என்னை பாருங்கள் என்று சொல்வது போல பாடுகின்றார். அந்த பளபளப்பு மற்றும் போலி தன்மையை தான் மக்களும் விரும்புகின்றனர் என்று ஆண்ட்ரியாவை சுசித்ரா விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…