சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, பிட்புல் மற்றும் ராட்வீலர் போன்ற ஆக்ரோஷமான நாய் இனங்களை வளர்ப்பதற்கு மாநகராட்சி அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இனிவரும் காலங்களில் இந்த வகை நாய்களுக்குப் புதிய உரிமம் வழங்கப்படாது என்றும், பழைய உரிமங்களைப் புதுப்பிக்க முடியாது என்றும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறி யாராவது இந்த நாய்களை வளர்த்தால், அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக வளர்ப்பு நாய்கள் பொதுமக்களையும் குழந்தைகளையும் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வகை நாய்களை வளர்த்து வருபவர்கள், அவற்றை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது தகுந்த பாதுகாப்பு கவசங்களையும் (Muzzle) கழுத்துப் பட்டையையும் (Leash) அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையைப் பின்பற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
சென்னையில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் அனைவரும் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்றும், பிறருக்கு இடையூறு இல்லாமல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் நாய் கடி சம்பவங்களைக் குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அஸ்ஜத், கட்டுப்பாட்டை இழந்த ஒரு வண்டிக்கு இடையே தலை மற்றும்…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அன்றாடம் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களைக் கண்டு கொள்ளாமல் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாய்மூடி…
தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் குளிப்பதைத் தனது செல்போனில் எட்டிப்பார்த்த தம்புக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சி…
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…
கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் தற்காலிகக் கட்டண விலக்கு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.…
மதுரை புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் மர்ம…