மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இன்று ஒரு ‘இரட்டை நற்செய்தி’ கிடைத்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து எல்பிஜி சிலிண்டர் எரிவாயு ஏற்றப்பட்ட ‘பிக்சிஸ் பயனியர்’ என்ற கப்பலும், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிய ‘அக்வா டைட்டன்’ என்ற கப்பலும் கர்நாடகாவின் மங்களூரு துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருள் வருவதில் சிக்கல் நீடிக்கும் சூழலில், இந்த மாற்று வழி விநியோகம் இந்தியாவிற்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து சீனாவுக்குச் செல்ல வேண்டிய இந்த ‘அக்வா டைட்டன்’ கப்பல், சர்வதேச அரசியல் சூழல் மற்றும் இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளால் பாதியிலேயே திருப்பி விடப்பட்டு இந்தியாவை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் ஒரே நேரத்தில் எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவது இந்தியாவின் வலுவான வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நீங்கி, சந்தையில் விலையை நிலைப்படுத்த வழிவகை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தானே நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலாவ்பாலி பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…
குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…