மகளின் காதல் திருமணம்… சகோதரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… 35 சவரன் நகை, 2 லட்சம் பணம் தீயில் கருகிய சோகம்…!

Spread the love

திருமங்கலத்தில் மகள் காதல் திருமணம் செய்ததால் இரண்டு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு முன்விரோதம் காரணமாக காதலன் சகோதரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட திருமங்கலம் – சோழவந்தான் சாலையில் வசித்து வரும் செல்வம் மற்றும் பத்மாவதி தம்பதியின் இளைய மகன் அஸ்வந்த் (25). இவர் திருமங்கலம் பழனியாபுரத்தை சேர்ந்த கவிராஜன் என்பவருடைய மகள் அனிதா (24) என்பவரை காதலித்து வந்த நிலையில் நான்கு வருட காதல் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு திருமணத்தில் முடிந்தது. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் அனிதா பெற்றோருடன் செல்ல விருப்பமில்லாமல் காதலனோடு சென்று விட்டதால் பெண் வீட்டார் ஆத்திரத்தில் இருந்தனர்.

இதனால் அடிக்கடி இரு வீட்டாரிற்கும் இடையே தகராறு வந்த நிலையில் செல்வம் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் செல்வத்தின் மூத்த மகள் பிரியதர்ஷினி மாமியார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் செல்வம் அவருடைய மகள், மருமகன், மகன் மற்றும் மருமகள் ஆகியோர் தனித்தனி இருசக்கர வாகனத்தில் மதுரைக்குச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவரை பார்த்துவிட்டு மீண்டும் திருமங்கலம் வந்தனர்.

திருமங்கலம் நகர் காவல் நிலையம் அருகே வந்தபோது அஸ்வந்த் வாகனத்தை கவிராஜன் மறித்து தகராறு செய்துள்ளார். அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து எரிந்ததில் அஸ்வந்த் தந்தை செல்வத்திற்கும் அவருடைய பேத்திக்கும் காயம் ஏற்பட்டது. தகராறு நடப்பதைக் கண்டு அந்த வழியாக வந்த போலீஸ் சார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே இரவு 10 மணியளவில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள அஸ்வந்த் சகோதரி பிரியதர்ஷினி வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றுள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசியதால் வீட்டில் இருந்த அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் தீ விபத்து தொடர்பாக அருகில் இருந்தவர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டின் அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. அதில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் தங்க நகைகள் உருகியது. மேலும் ரொக்க பணம் 2 லட்சம் ரூபாயும் தீயில் கருகி சாம்பல் ஆனது.

உடனே தகவல் அறிந்து செல்வம் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அஸ்வந்த் சகோதரி பிரியதர்ஷணியின் கணவர் பாலமுருகன் பெட்ரோல் குண்டு வீசியது கவிராஜன் அவருடைய மைத்துனர் சாந்தகுமார் மற்றும் கவிராஜன் மகன் கவுசி குளித்தோர்தான் காரணம் என்று போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணத்தால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“விஜய்யின் காலில் விழுந்து கதறினேன்.. எல்லாவற்றிற்கும் இவர்தான் காரணம்”…. திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் பரபரப்பு புகார்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

13 seconds ago

பகீர்!… சொந்தப் பேத்தியையே சீரழித்த தாத்தா!… காமவெறி முதியவருக்கு 61 ஆண்டு சிறை தண்டனை… சிவகங்கை நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…

3 minutes ago

BIG BREAKING: ‘ஜனநாயகன்’ திரைப்படம்…. சற்றுமுன் கோர்ட் அதிரடி உத்தரவு.. விஜய்க்கு மகிழ்ச்சி…!

சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…

13 minutes ago

இந்தியாவுக்கு பலத்த அடி!… “இனி ஒரு சொட்டு கூட கிடையாது”… ரஷ்யா, ஈரானுக்கு அமெரிக்கா போட்ட ரெட் கார்டு… கதிகலங்கிய உலக நாடுகள்…!!!

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…

18 minutes ago

“நாங்கள் தயார்”.. வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா?… உலக நாடுகளை உலுக்கும் அமெரிக்காவின் அடுத்த மூவ்… அதிரும் சர்வதேச அரசியல்…!

சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…

22 minutes ago

குக் வித் கோமாளியில் நடந்த அடுத்த சம்பவம்… மேடையிலேயே கதறி அழுத ரோஜா… என்ன ஆச்சு…?

சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…

28 minutes ago