பொதுவாகவே நாம் வீட்டை என்னதான் சுத்தமாக வைத்திருந்தாலும் வெயில் காலம் மற்றும் கோடை காலங்களில் எறும்புகள், கொசுக்கள் மற்றும் ஈக்கள் போன்ற பூச்சிகள் வீட்டிற்குள் வர தொடங்கி விடும். சமையலறை மற்றும் குளியலறையின் வடிகால் வழியாக வீட்டுக்குள் நுழையும். மேலும் கொசுக்கள் பெருகும் அபாயமும் அதிகம் ஏற்படும். கொசு கடித்தால் அதிக நோய்கள் பரவும். இப்படியான சூழலில் வீட்டை தினமும் சுத்தம் செய்வது முக்கியம். பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் வீடு துடைக்க கடைகளில் விற்கப்படும் ரசாயனங்கள் கலந்த சுத்தம் செய்யும் திரவத்தை பயன்படுத்துகிறோம். இது சுத்தம் செய்ய மட்டுமே உதவுமே தவிர ஈ, எறும்பு மற்றும் கரப்பான் பூச்சி போன்றவை உங்கள் வீட்டுக்குள் வருவதை தடை செய்யாது. இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் எளிய பொருள்களை பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்தால் போதுமானது.
அதற்கு வீட்டை சுத்தம் செய்யும் தண்ணீரில் சிறிது படிகாரத்தை சேர்க்க வேண்டும். இதை செய்வதன் மூலம் கொசுக்கள், ஈக்கள், எறும்புகள் ஓடிவிடும். படிகாரம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் பூச்சிக்கொல்லியாக செயல்படும். அடுத்து எலுமிச்சைச்சாற்றை எடுத்து நீங்கள் வீடு துடைக்கும் தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் வீடு சுத்தமாக மாறுவது மட்டுமல்லாமல் பூச்சிகள் வருவது தடுக்கப்படும். எலுமிச்சை எறும்புகள், ஈக்கள் மற்றும் பிற சிறிய பூச்சிகளை விரட்டியடிக்கும். படிகாரம் மற்றும் எலுமிச்சையை தண்ணீரில் கலந்து கரப்பான் பூச்சிகள் மற்றும் எறும்பு இருக்கும் இடங்களில் தெளித்துவிட்டால் அவை அந்த பக்கம் வராது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…