விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .இந்த சீரியலில் அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமை பற்றி விரிவாக எடுத்துக் கூறுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியல் அன்பு, பாசம், ஒற்றுமை ,கோபம் ,வெறுப்பு, துரோகம் என அனைத்தையும் ஒருங்கே காட்டி வருகிறது. ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வந்தது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சனிக்கிழமை அன்று இறுதிக்கட்டத்தை எட்டி சுபத்துடன் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2வது சீசன் அக்டோபர் 30 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று தொடங்கப்படவுள்ளது. இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து அப்பாவாகவும் அவரின் மனைவியாக நிரோஷாவும் நடிக்க உள்ளனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தொடர்ந்து விஜய் டிவி இந்த சீரியலுக்கான ப்ரோமோவை வெளியிட்டு வந்தது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக மீனா கதாபாத்திரத்தை கூறலாம். இரண்டாவது மருமகளாக மீனா கதாபாத்திரத்தில் நடிகை ஹேமாவின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்திலும் கலந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.
இந்நிலையில் நடிகை ஹேமா தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலும் அதே மீனா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த செய்தி அவரது ரசிகர்களை செம குஷிப்படுத்தியுள்ளது. TRP -க்காக விஜய் டிவி எப்படியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விலும் மீனாவை களமிறக்கி உள்ளது ஒரு நல்ல முடிவு தான் என்றே கூறலாம்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…