இபிஎஸ்-க்கு ஷாக்… அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்?… விஜய்யுடன் ஐக்கியம்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற நிலைப்பாட்டோடு செயல்பட்டு வருகிறது.

மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தமிழகத்தில் நம்முடைய ஆட்சி தான் அமையும் என்று கூறிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு நடுவே விஜய் மக்களுக்கு புதியதொரு விடியலை தரப்போகிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதன் அத்தியாயமாக இன்று திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை விஜய் தொடங்கியிருந்தார். இது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

இந்நிலையில் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய்க்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றும் அவரது வெற்றி பயணம் தொடரட்டும் என்று அவர் தன்னுடைய X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பாரிவேந்தர் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என விஜய் அறிவித்துள்ளதால் பல புதிய கட்சிகள் தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

16 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

27 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

40 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

40 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

46 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

56 minutes ago