சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் கோரிமேடு பகுதியில் உள்ள செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மாணவி அரசு நகர பேருந்தில் ஏறி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் மாணவியை கிண்டல் செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவி நடத்துனர் திருமுருகனிடம் கூறியும் அவர் வாலிபரை கண்டிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த மாணவி செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பழைய பேருந்து நிலையத்தில் திரண்டனர். பேருந்து வந்தவுடன் அவர்கள் அந்த வாலிபரை தேடி உள்ளனர். ஆனால் அவர் முன்னதாகவே இறங்கி சென்றார்.
இதனால் மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் தகராறு செய்து நடத்துனர் திருமுருகன், ஓட்டுனர் தனபால் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆறுமுகம், பாலமுருகன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…