“தொட்டுப்பார் வம்புக்கு வருவோம்”… பாகிஸ்தான் போட்ட ‘டபுள் கேம்’.. அம்பலமான நள்ளிரவு ரகசியம்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ பில்லியன் டாலர் டீல்…!

Spread the love

சர்வதேச அரங்கில் ஒருபுறம் அமைதித் தூதனாகவும், மறுபுறம் ராணுவக் கூட்டாளியாகவும் பாகிஸ்தான் ஆடி வரும் ‘டபுள் கேம்’ தற்போது ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலில், அமைதி பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தும் முக்கிய மத்தியஸ்தராகத் தன்னை காட்டிக் கொள்ள பாகிஸ்தான் முயன்றது. கடந்த ஆறு வாரங்களாக நீடிக்கும் தற்காலிகப் போர்நிறுத்தத்திற்குப் பாகிஸ்தானே தூதுவராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதன் பின்னணியில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் தனது பிரம்மாண்ட ராணுவப் படைகளை இறக்கியிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கடந்த ஆண்டு சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான ரகசியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த காய நகர்த்தல்கள் நடந்துள்ளன. அமெரிக்கா உடனான மோதலின் போது, சவூதியின் முக்கிய எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு சவூதியைக் காக்கும் அரணாகப் பாகிஸ்தான் தனது ராணுவ பலத்தைக் களமிறக்கியுள்ளது. வெறும் பெயரளவிலான ஆலோசனைக் குழுவை மட்டும் அனுப்பாமல், முதற்கட்டமாக 8,000 வீரர்கள் சவூதி எல்லைகளைப் பாதுகாக்க அனுப்பப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் இந்த எண்ணிக்கையை 80,000 வீரர்கள் வரை உயர்த்தவும் அந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வீரர்கள் மட்டுமன்றி, சீனாவோடு இணைந்து தயாரிக்கப்பட்ட சுமார் 16 ‘ஜேஎஃப்-17’ (JF-17) போர் விமானங்கள் அடங்கிய முழு ஸ்குவாட்ரனும், இரண்டு ஸ்குவாட்ரன் டிரோன்களும் கடந்த ஏப்ரல் மாதமே சவூதிக்குச் சென்றுள்ளன. இது தவிர, வான்வழித் தாக்குதல்களை முறியடிக்கச் சீனாவின் நவீன HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பும், பாகிஸ்தானின் அதிநவீனப் போர்க்கப்பல்களும் சவூதி எல்லை நோக்கி விரைந்துள்ளன. இந்த ஒட்டுமொத்த ராணுவப் படைகளையும் பாகிஸ்தான் வீரர்களே இயக்கினாலும், இதற்கான ஒட்டுமொத்தச் செலவையும் சவூதி அரேபியாவே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்துப் பேசியிருந்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், “சவூதி அரேபியா மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதைத் தங்களுக்கு எதிரான தாக்குதலாகவே பாகிஸ்தான் கருதும்; சவூதி இப்போது பாகிஸ்தானின் அணுசக்தி குடையின் கீழ் பாதுகாப்பாக உள்ளது” என ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். தன் மண்ணில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில் ஈரான் மீது சவூதி நடத்திய ரகசியத் தாக்குதல்களுக்குப் பாகிஸ்தான் ராணுவம் உதவியதும் தற்போது அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தான் பொருளாதார ரீதியாகத் திவாலாகும் நிலைக்குச் செல்லும்போதெல்லாம் பில்லியன் டாலர்களை அள்ளிக்கொடுத்துக் காப்பாற்றிய சவூதியின் நன்றிக்கடனுக்காகவே, பாகிஸ்தான் தற்போது அதன் ‘வாடகை ராணுவமாக’ மாறியுள்ளது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் சாடுகின்றனர்.

Nanthini

Recent Posts

BREAKING: போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… தமிழகத்தில் உச்சக்கட்ட பரபரப்பு….!

நெல்லை மாவட்டம் மானூர் புறக்காவல் நிலையம் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில்…

5 minutes ago

BREAKING: “அங்க EPS மீட்டிங்.. இங்க இவங்க மீட்டிங்”…. அதிமுகவில் திடீரென எகிறிய அரசியல் சூடு… கிடுகிடுக்கும் ராயப்பேட்டை….!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு…

14 minutes ago

BREAKING: “பதவி ராஜினாமா.. திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி”… ஸ்டாலின் முன்னிலையில் நடந்த ட்விஸ்ட்… TVK மீது அதிருப்தி….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு…

19 minutes ago

இனி ஒருத்தி எனக்கு வேண்டாம்.. வெளிநாட்டுப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு.. கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. கணவன் கண்ணீரோடு தற்கொலை..!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும்,…

22 minutes ago

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… அடுத்த 24 மணிநேரத்தில் நடந்த ட்விஸ்ட்… CM விஜய்யின் முதல் ‘அதிரடி ஆட்டம்’….!

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில்…

25 minutes ago