அவர் மனைவி குழந்தைகளை எப்படி தேற்றுவது…? மனம் கலங்குகிறது… சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழப்பு குறித்து பா.ரஞ்சித் இரங்கல்..!!

Spread the love

பா.ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின் போது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்டண்ட்  மாஸ்டர் மோகன்ராஜ் காரில் இருந்து குதித்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து பா.ரஞ்சித் உருக்கமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது.

எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம்.

ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம். இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

14 minutes ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

22 minutes ago

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

31 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

33 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

40 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

43 minutes ago