தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்கி தீவிரமாக தேர்தல் பணியில் செயலாற்றி வருகின்றன. அதேசமயம் அதிமுக மற்றும் திமுகவுக்கு போட்டியாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. விஜய் அரசியலில் இறங்கிய பிறகு மாற்றுக் கட்சியினர் பலரும் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர். அதேசமயம் திமுகவும் தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைத்து வருகிறது.
இந்நிலையில் சென்னை ஆலந்தூர் தொகுதி நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த அதிமுகவை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைச்சர் தாமு அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விரைவில் மேலும் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைய உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…